உலகவாழ்க்கை 3 மணித்தியாலம் மாத்திரமே (குர்ஆன்)

Go down

உலகவாழ்க்கை 3 மணித்தியாலம் மாத்திரமே (குர்ஆன்)

Post by INAS on 24/01/11, 03:40 pm

by Abdul Raheem Mohamed Inas on Thursday, November 11, 2010 at 8:19am


நிச்சயமாக அவர்கள் அதனை (கண்ணால்) காணும் நாளில் மாலையிலோ அல்லது
முற்பகலிலோ(சிறிது நேரமே) (உலகில்) அவர்கள் தங்கியிருந்தது போன்று
(அவர்களுக்குத் தோன்றும்).(79:46)


இந்த குர்ஆன் வசனத்தை கவனமாக நாம் பார்போமானால் இந்த உலகம் மிகவும்
அற்பமானது என்று நமக்கு தோன்றும்.அதாவது இந்த உலக வாழ்க்கை ஒரு
மாலைப்பொழுது அல்லது முற்பகல் பொழுது போன்று மிகவும் ஒரு குறுகிய நேரம்.


ஒருவன் மறுமைநாளில் தன் உலக வாழ்வை மீட்டிப்பார்த்தால் அவர்கள்
இப்படித்தான் உணர்வார்கள்.உதாரணமாக மாலை நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
அது எவ்வளவு நேரம் இருக்கும் கூடினால் ஒரு 3 மணித்தியாலங்கள் இருக்கும்.
முற்பகல் பொழுதும் பெரும்பாலும் ஒரு சிரிய நேரமே இருக்கும்.அதாவது ஒரு
சிரிய பயணம் போகும் நேரம். உதாரணமாக கொழும்பிலிருந்து கண்டிக்கு பயணம்
செல்லும் நேரம். நாங்கள் உலகில் வாழ்நாள் முழுதும் இன்பம் அனுபவித்தோம்
என்று வைத்துக்கொள்வோம் அதனை மறுமையோடு ஒப்பிடும் போது அது வெறுமனே 3
மணித்தியால இன்பம் மட்டும் தான். உண்மையில் எம்மால் நிச்சயம் வாழ்நாள்
பூராவும் இன்பம் அனுபவிக்க முடியாது ஏனெனில் இன்பம் என்பதை
புரிந்துகொள்ளும் போதே எமது வாழ்க்கையில் அரைவாசி முடிந்துவிடும். அந்த
இன்பத்தை விளங்கி அனுபவிக்ககும் போது எமக்கு நோய் வயோதிபம் (சீனிவியாதி
கொலஸ்ட்ரோல்) அப்படியெல்லாம் வந்து அதில் காலம் கழிந்துவிடும். அப்படிப்
பார்த்தால் நாம் உலக இன்பத்தை வாழ்நாள் பூராக அனுபவித்தாலும் அந்த
இன்பத்தை மறுமையோடு ஒப்பிட்டால் உலக இன்பம் ஒரு சில மணித்தியாலங்கள் போல்
தான் இருக்கும்.

இதை நீங்கள் இன்னும் சற்று ஆழமாக புரியவேண்டுமானால் நீங்கள் உங்கள் கடந்த
காலத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் உணர்வு எப்படியிருக்கும்
நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள் நாம் இவ்வுலகில் நேற்று தான் பிறந்து
வளர்ந்து எல்லாம் நடந்தது போல் இருக்கும். அதாவது கொஞ்சம் காலம் தான் நாம்
வாழ்ந்தது போல் நாம் உணர்வோம். அப்படி நாம் கற்பனை செய்யும் போது நாம்
சில இடங்களில் யோசிப்போம் நான் இப்படி செய்திருந்தால் நன்றாக
இருந்திருக்குமே நான் அப்படி செய்திருந்தால் நான் முன்னேறியிருப்போமே
என்று கைசேதமும் படுவோம்.

அவ்வாறு தான் மறுமை மஹ்ஷரில் நீங்கள் இந்த உலக வாழ்க்கையை கற்பனை செய்து
பார்த்தால் இந்த உலக வாழ்க்கை ஒரு சில மணித்தியாலங்கள் போல் தான்
இருக்கும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள் அந்த ஒரு சில மணித்தியால இன்பங்களுக்காக
வேண்டி தான் நாம்அடுத்தவனுக்கு குழிபறிக்கிறோம் அடுத்தவனுக்கு காபிர்
முனாபிக் என்று பத்வா கொடுக்கிறோம். உலகமே அது தான் என்று கூறிக் கொண்டு
இளைஞர்கள் பெண்களின் பின்னால் அழைகிறோம். ஒரு கூட்டம் சினிமாவின் பின்னால்
அழைகிறது இன்னொரு கூட்டம் பணத்தின் பின்னால் அழைகிறது இன்னொரு கூட்டம்
அரசியல்வாதிகளின் பின்னால் அழைகிறது இன்னொரு கூட்டம் புகழ் பதவியின்
பின்னால் அழைகிறது.

சற்று சிந்தித்து பாருங்கள் இது எல்லாவற்றின் பின்னால் அழைந்து நாம் அதை
பெற்றுக்கொண்டோம் என்று வைத்துக் கொள்வோம் அதை மறுமை வாழ்வோடு ஒப்பிடும்
போது அது ஒரு சில மணித்தியால இன்பம் மாத்திரமே.

மஹ்ஷரில் நடக்;கும் ஒரு விடயத்தை சற்று உணர்ந்து பாருங்கள் நாம் இந்த
உலகில் ஒரு நாள் தூங்காமல் இருந்தால் நம் நிலை எப்படியிருக்கும் நாம்
இங்கு எவ்வளவுதான் பசி தாகம் துன்பம் என்ன வந்தாலும் ஒரு தூக்கம்
தூங்கினால் நமக்கு அந்த கஷ்டம் கொஞ்சம் விளங்காமல் போகும். ஆனால் மஹ்ஷரில்
தூக்கமும் இருக்காது. தூக்கமில்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமல் உண்ண
உணவில்லாமல் நாம் அங்கு அழையப் போகிறோம். அது மட்டுமல்ல சூரியன்
பணிக்கப்படும் வெயில் கூட கடுமையாக இருக்கும். உண்மையில் அந்த காட்சியை
கொஞ்சம் சற்று சிந்தித்து பாருங்கள். இந்த உலகில் நாம் ஒரு நாள் தூங்காமல்
இருந்தாலே நமது நிலை மோசமாகிவிடும் ஆனால் மஹ்ஷரில் தூக்கம் இல்லை தண்ணீர்
இ;ல்லை உணவும் இல்லை ஆயிரக்கணக்கான வருடம் நாம் மஹ்ஷரில் அலைந்து திரிய
வேண்டும் சற்று சிந்தித்து பாருங்கள் நிலைமையை. மஹ்ஷரின் வேதனை தாங்க
முடியாமல் மக்கள் சொல்வார்கள் இந்த மஹ்ஷர் வேதனையை நிறுத்திவிட்டு
விசாரணையை ஆரம்பித்து எங்களை நரகில் அல்லது சுவர்க்கத்தில் போடுங்கள்
என்பார்கள் (விசாரணை நாளினது பயங்கரம் தெரியாமல்).

உண்மையில் மறுமையென்பது நாங்கள் நினைப்பது போல் ஒரு சிரிய விடயம் அல்ல. அது மிகவும் பயங்கரமானது.

பாருங்கள் மனிதர்களில் மடையர்கள் 2 வகை

1. தனது உலகத்திற்காக தனது ஆகிரத்தை(மறுமையை)
இழப்பவன்அதாவது இந்த உலக அற்ப 3 மணித்தியால உலகத்தை அனுபவிப்பதற்காக
உலகில் உள்ள அத்தனை பாவங்களையும் செய்பவன். வட்டி ஏமாற்றுதல் மோசடி
செய்தல் அடுத்தவனின் சொத்தை திருடுதல் விபச்சாரம் பொய் களவு காதலிக்காக
பெற்றோரை புறக்கணித்தல் காபிரான சினிமா கூத்தாடிகளின் பின்னால் அழைதல்
இப்படி உலகில் இருக்கும் அத்தனை பாவங்களையும் செய்து தனது மறுமையை தனது
உலக இன்பங்களுக்காக பாழாக்கிக் கொள்பவன்.


2. பிறரின் உலகத்திற்காக தனது ஆகிரத்தை
(மறுமையை) நாசமாக்கி கொள்பவன்.அதாவது தனது மனைவி தனது பிள்ளை தனது
உறவினர்களை வாழவைக்க தொழுகை இபாதத் எல்லாவற்றையும் மறந்து உழைத்தல் இவர்கள்
எந்நேரம் பார்த்தாலும் பிஸ்னஸ் தன் மகளுக்கு பெரிய இடத்துல் திருமணம்
செய்து வைக்க வேண்டும் எமது பிள்ளைகள் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக
அல்லாஹ் ரஸூல் மார்க்கம் எல்லாவற்றையும் மறந்து உழைத்தல் பணம்
சேமிப்பதிலேயே அவனது காலம் முடிந்துவிடும் வீடுகட்டுவதிலேயே அவனது ஆயுள்
முடிந்துவிடும். பெருநாளைகளுக்கு கூட அவன் வீட்டில் இருக்கமாட்டான் பணம்
பணம் பணம்தான் உலகம் என்று அலைந்து திரிவான். கடைசியில் அவன் உலக
இன்பத்தையும் இழக்கிறான் மறுமை இன்பத்தையும் இழக்கிறான். அங்கும் நஷ்டம்
இங்கும் நஷ்டம். மறுமையில் அவன் யாருக்காக உழைத்தானோ அவர்களே அவனை விட்டு
விரண்டோடுவார்கள் அந்த நேரம் கைசேதப்பட்டு எந்த பயனும் இல்லை.


பாருங்கள் எவ்வளவு பெரிய மடத்தனம் ஒரு சில மணித்தியால இன்பங்களுக்காக அவன்
இழப்பது எந்த கண்ணும் பார்திடாத எந்த காதும் கேட்டிடாத நம்மால்
கற்பனையும் செய்து பார்க்க முடியாத இன்பத்தை இழக்கிறான். அது மட்டுமா
அவனுக்கு அதற்கு பதிலாக கிடைக்கப் போவது பயங்கரமான வேதனை அவன் கற்பனையும்
செய்து பார்த்திடாத வேதனை.

இந்த உலகத்தில் அடிக்கும் கூத்தையெல்லாம் அடித்துவிட்டு அங்கு மறுமை
வேதனையின் கடுமையை கண்டவுடன் பாவத்தில் மூழ்கிய மனிதர்கள் கூறும் வார்த்தை
நான் மனிதனாக இல்லாமல் மண்ணோடு மண்ணாகியிருந்திருக்க கூடாதா
என்பார்கள்.உண்மையில் அது காலம் தாழ்த்திய ஞானம்.

சிந்தித்து பாருங்கள் சகோதரர்களேகுர்ஆனின் பார்வையில் உலக வாழ்ககை ஒரு சில
மணித்தியாலங்களே அந்த ஒரு சில மணித்தியால இன்பத்துக்காக வேண்டி நாம்
இழக்கப் போவது நிலையான எந்த கண்ணும் கண்டிராத எந்த காதுகளும் கேட்டிராத
யாராலும் கற்பனையும் செய்து பார்க்க முடியாத இன்பத்தை.எமக்கு கிடைக்கும்
தண்டனையை பொருத்தவரையில் உதாரணமாக நாம் ஒருவரை லேசாக நோண்டுவதாக எடுத்துக்
கொள்வோம் லேசாக வழிக்கும் அதே செயலை நாம் பல ஆயிரம் வருடங்கள் தொடர்ந்து
செய்தால் வேதனை எப்படியிருக்கும் (நிச்சயம் அது கடும்
வேதனையாகத்தானிருக்கும்) ஆனால் நரகம் சிரிய வேதனையல்ல மிகவும் கடுமையானது.
நரகத்தை கண்டதிலிருந்து அதற்கு பொறுப்பான மலக்கு சிரிக்கவே இல்லை அந்த
வேதனை வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை.

உலகில் நாம் அனுபவிக்கும் துன்பம் கஷ்டங்கள் அது நரக வேதனையில் துளி கூட இல்லை.

நாங்க்ள கொஞ்சம் காலம் அதாவது 3 மணித்தியாலம்
பொறுமையாக இஸ்லாத்தை பின்பற்றினால் அப்படி நாம் இஸ்லாத்தை பின்பற்றுவதால்
நமக்கு வரும் கஷ்டம் துன்பம் சோதனை எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்து
வாழ்ந்தால் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான்.அல்லாஹ் நாம்
மண்ணோடு மண்ணாகியிருக்கக் கூடாதா என்று கைசேதப்படவும் தேவையில்லை.

A.R.M. INAS
inasinas@live.com
inaasinaas.blogspot.com

INAS

Posts : 17
Points : 53
Reputation : 6
Join date : 24/01/2011
Age : 33

View user profile http://inaasinaas.blogspot.com/

Back to top Go down

Re: உலகவாழ்க்கை 3 மணித்தியாலம் மாத்திரமே (குர்ஆன்)

Post by Admin on 24/01/11, 03:43 pm

உண்மை தான்
avatar
Admin
Admin

Posts : 43
Points : 156
Reputation : 1
Join date : 23/01/2011

View user profile http://islam.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum