பகுத்தறிவின் மூலம் இறைவனை அறியுங்கள்

Go down

பகுத்தறிவின் மூலம் இறைவனை அறியுங்கள்

Post by Admin on 24/01/11, 01:51 pm

நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தை சுற்றி ஒரு முறைப் பாருங்கள். அந்த அறை, அதிலுள்ள சுவர்கள், அதன் உத்திரம், நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் கணணி, அல்லது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம், மேஜை மீதிருக்கும் பொருட்கள், சுவர் கடிகாரம் இன்னும் மற்றவைகள் அனைத்தும் அவiயாகவே உருவாகி அந்த அறைக்கு வந்து விடவில்லை. மேலும் நீங்கள் பார்க்கும் எந்த பொருளும் திடீரென்று அந்கு முளைத்தும் விடவில்லை.

ஒருவர் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே இந்த புத்தகம் ஒரு ஆசிரியரால் ஏதோ ஒரு காரணத்திற்காக எழுதப்பட்டுள்ளது என்பதை அறிவார். மாறாக அவை தாமாகவே வந்து விட்டது என்று நினைப்பாரா...? அதே போன்று ஒரு சிலையைப் பார்ப்பவர்கள் அந்த சிலை வடிக்கப்பட்டுள்ள அழகையும் அது ஒரு சிற்பியால் செய்யப்பட்டிருக்கும் என்பதையும் விளங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை. சிலை வடிப்பதை விட்டுவிடுவோம். ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள செங்கற்களை எடுத்துக் கொள்ளுங்கள் அதை யாரோ ஏதோ காரணத்திற்காக அடுக்கி வைத்துள்ளர்கள் என்று தானே நினைப்போம். அதே போன்று ஏதாவது ஒன்று முறையாக செய்யப்பட்டிருந்தால் அது பெரியதோ - சிறியதோ அதை யாரோ நிறுவி பாதுகாத்து வருகிறார்கள் என்று தானே பொருள். பிரான்ஸ் நாட்டு பில் கோபுரம் அங்கு தானாகவே வந்து விட்டது என்று யாராவது கூறினால் அவ்வாறு கூறுபவரையும் அந்த கூற்றை நம்புபவரையும் அறிவீலிகள் என்று கூறுவோமல்லவா...!

அல்லாஹ்வை மறுக்கும் பரிணாம வளர்ச்சி முறை இவை அனைத்தும் தானாகவே வந்து விட்டதாக வாதிடுகிறது. அந்த சித்தாந்தத்தின் படி வேதியல் மூலக்கூறுகள் தானாகவே அமினோ அமிலங்களை உருவாக்கி விட புரோட்டின் புரதம் தானாகவே உயிரிகளை உருவாக்கி விட்டனாவாம். நவீன அறிவியலின் கருத்துப்படி புரோட்டினிலிருந்து உயிர் தானாக உருவாவது என்பது பிரான்ஸ் நாட்டு பில் கோபுரம் தானாகவே அங்கு வந்து விட்டது என்பதை விட நடக்க முடியாத ஒன்றாகும். எனெனில் மிக சாதாரணமான ஒரு செல் என்பது உலகத்தில் மனிதனால் வடிவமைக்கப்பட்ட எந்த ஒரு கட்டிடத்தையும் அல்லது கடினமான பொருட்களையும் விட கடினமான வடிவமைப்பைக் கொண்டதாகும். பூமியிலிருக்கும் ஒவ்வொன்றும் சரியான விதத்தில் சமன் படுத்தப்பட்டுள்ளன. வெறும் கண்ணால் காணக் கூடிய யாவும் தானாகவே தன்னை ஒழுங்குப்படுத்திக் கொண்டன என எண்ணுவது எவ்வாறு சாத்தியமாகும்?

இதுவே சாத்தியமில்லையென்றால் நம் கண்ணுக்குப் புலப்படாத எண்ணற்றவைகளும் ஏன் இந்த பூமியையே உள்ளடக்கிய பிரபஞ்சமும் தானாகவே உருவாகி விட்டது என்று ஒரு சித்தாந்தம் சொன்னால் அதை எந்த அடிப்படையில் ஏற்க முடியும்? இவற்றின் ஒவ்வொரு பகுதியும் தன்மையும் அதை ஆக்கியவனை பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. எனவே நாம் காணக்கூடியவைகளும் -காண முடியாதவைகளும் அருகாமையிலிருக்கும் நம் உடம்பிலிருந்து மிக, மிக பெரிய பிரபஞ்சத்தின் அடுத்த மூலை வரை நேர்த்தியாக உருவாக்கியது யார்? அவன் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பொருளாக இருக்க முடியாது. அவன் தான் இப்பிரபஞ்சத்தையும், மற்றவைகளையும் உருவாக்கி இருக்க வேண்டும். இந்த மார்க்கம் நமக்கு தேவையான அனைத்தையும் உருவாக்கியவனை நமது பகுத்தறிவைக் கொண்டு அறியும் முறையை சொல்லுகின்றன. அதன் மூலம் அவன் நமக்கு மார்க்கத்தை அறிவித்திருக்கிறான். நாம், அவன் அருளாளன் அன்புடையோன் எனும் அல்லாஹ் என்று அறிவோம். அவனே அனைத்தையும் ஒன்றுமில்லாதவையிலிந்து படைத்தான்.

நம் பகுத்தறிவைக் கொண்டு அறியும் விஷயமாக இது இருந்தாலும் பலர் இதை அறியாமல் தமது காலங்களை கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு அழகான ஓவியத்தைப் பார்த்தவர் அந்த ஓவியரைப் பற்றி நீளமாக பாராட்டுகிறார். ஆனால் ஒவ்வொரு கணமும் பார்க்கும் எண்ணிலடங்கா ஓவியங்களை தீட்டிய அல்லாஹ்வை நினைக்கவோ பாராட்டவோ தோன்றுவதில்லை. உண்மையில் அவனை அறிய ஒரு நீண்ட ஆராய்சியாவது செய்திருக்கிறோமா.. ஒருவன் பிறந்ததிலிருந்து அறையை விட்டு வெளியில் வராமல் தனிமையிலேயே வளர்ந்தால் கூட இறைவனைப் பற்றிய ஏராளமான ஆதாரங்களை அவனால் உணர முடியும். மனிதனின் உடலில் உள்ளவைகளை மட்டும் அறிய முற்பட்டோமானால் அதில் மட்டுமே பல பாகங்களை கொண்ட கலை களஞ்சியத்தில் (நுnஉலஉடழடியநனயை) அடக்க முடியாத அளவிற்கு ஆதாரங்கள் நிரம்பி வழிவதை கண்டுக் கொள்ள முடியும்.

ஒருசில நிமிடங்களை அறிவுடன் கழித்தால் கூட இறைவன் இருக்கிறான் என்பதை அறிய போதுமானதாய் இருக்கும். இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு முறையுடன் இயங்குகிறது. அவற்றை ஆக்கியவன் அவற்றை சமன் படுத்தி இயக்குபவனாக இருக்கிறான். மனித உடல் மட்டும் அறிவுக்கு உணவல்ல. உணர முடிகிறதோ இல்லையோ உயிர் இவ்வுலகத்தின் மூளை முடிக்கிலெல்லாம் நிறைந்தள்ளது. கணக்கிலடங்கா உயிரினங்கள் இப்பூமியில் நிரம்பி வழிகின்றன. ஒரு செல் உயிரியிலிருந்து செடி கொடிகள் வரை. புழு பூச்சிகளிலிருந்து கடல் வாழ் உயிரிகள் வரை, விலங்கு - பறவைகளிலிருந்து மனிதன் வரை. ஒரு படி மண்ணை எடுத்து அதில் எத்துனை வகையான வடிவங்கள் குணாதிசயங்கள் கொண்ட உயிரினங்கள் உள்ளன என்பதை எண்ணிப் பாருங்கள். ஏன் நீங்கள் இழுத்து விடும் மூச்சுக் காற்றில் கூடத்தான். உடம்பை போர்த்தி இருக்கும் உங்கள் தோளில் எத்துனைக் கோடி உயிரினங்கள் இருக்கின்றன என்பதும் அவற்றின் பெயர்களும் உங்களுக்குத் தெரியாது. நம் குடலில் கோடானக் கோடி பாக்டரியாக்களும் - ஒரு செல் உயிரிகளும் நாம் உண்ணும் உணவு செரிப்பதற்கு உதவுகின்றன. எந்த ஒரு போருளோ உயிரியோ காரணமில்லாமல் உருவாகவில்லை என அறிய முடிகிறது. உலகில் மனிதர்களை விட அதிகமாக பரவி இருக்கும் உயிரினங்கள் பலவிதமான உடலமைப்பையும் வாழ்க்கை முறையையும் கொண்டுள்ளன. அவை உலகின் சுற்றுப்புற சூழல்களை பராமரிக்கின்றன. எனவே எந்த ஒரு உயிரினமும் அதுவாகவே உருவாகி உலகிற்கு வந்து விடவில்லை. அல்லது ஏதோ ஒரு பரிணாம வளர்ச்சியிலும் உருவாகிவிடவில்லை.

இந்த ஆதாரங்களின் மூலம் இந்த பிரபஞ்சமும் அதில் இருப்பவைகளும் அறிவாற்றல் மிக்க ஒன்றாலோ அல்லது ஒருவனாலோ இயக்கப்படுகிறது என்று அறிய முடிகிறது. அதிசயங்களின் மொத்த உருவமான இந்த பிரபஞ்சத்தை இயக்குவது என்னவாக இருக்கும்? நிச்சயமாக அதிலிருக்கும் உயிரினமாகவோ பொருளாகவோ இருக்க முடியாது. அல்லாஹ்வின் ஞானம் எங்கும் பரவி இருப்பதை இப்பிரபஞ்சம் பல ஆதாரங்கள் மூலம் நமக்கு உணர்த்துகிறது. உண்மையில் உலகில் உள்ள எந்த ஒரு மனிதனின் அறிவும் இதை மனப்பூர்வமாக மறுக்காது. இதைதான் இறைவன் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்.

அவர்களின் உள்ளங்கள் அவற்றை உறுதிக் கொண்ட போதிலும் அநியாயமாகவும், பெருமைக் கொண்டும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். (27:14)

ஹாரூன் யஹ்யா
avatar
Admin
Admin

Posts : 43
Points : 156
Reputation : 1
Join date : 23/01/2011

View user profile http://islam.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum