அல்குர்ஆனை விளங்கிக் கொள்ளல்

Go down

அல்குர்ஆனை விளங்கிக் கொள்ளல்

Post by Admin on 04/02/11, 03:36 pm

இமாம் அஹ்மதின் மாணவர் ஒருவர் இரவு முழுவதும் நின்று வணங்குவதாகவும்
குர்ஆனை பூரணமாக ஓதி முடிப்பதாகவும் பின்னர் ஸுபஹ் தொழுகையை தொழுவதாகவும்
இமாம் அஹ்மத் அவர்களுக்கு தெரிய வந்தது.

இமாம் அஹ்மத் தனது மாணவருக்கு குர்ஆனை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பதை
கற்றுக் கொடுக்க விரும்பினார். அவர் மாணவரை அழைத்து "நீங்கள் இவ்வாறு
செய்வதாக எனக்கு தகவல் கிடைத்தது" என்று கூறினார். அதற்கு அந்த மாணவரும்
"ஆம்" என்று பதிலளித்தார். இமாம் அஹ்மத் "அப்படியானால் நீங்கள் இன்று
செல்லுங்கள். நீங்கள் செய்தது போன்றே இன்றிரவும் நின்று வணங்குங்கள்.
என்றாலும் நீங்கள் எனக்கு முன்னால் குர்ஆனை ஓதுவது போன்று ஓத வேண்டும்.
அதாவது நான் உங்களுடைய கிராஅத்தை அவதானித்துக் கொண்டிருப்பதுபோல் நீங்கள்
ஓத வேண்டும். பின்னர் நாளை என்னிடம் வாருங்கள்" என்று கூறினார்.

அடுத்தநாள் மாணவர் அவரிடம் வந்தார். இமாம் அவரிடம் கேள்வி கேட்டார்.
அதற்கு அந்த மாணவர் ‘நான் பத்து ஜுஸ்உகளைத்தான் ஓதினேன் என்று கூறினார்.
அப்போது இமாம் அஹ்மத் நீங்கள் இன்று சென்று றஸூல் (ஸல்) அவர்களுக்கு
முன்னால் குர்ஆனை ஓதுவது போல் ஓதுங்கள்’ என்று கூறினார். மாணவர் சென்றார்.

அடுத்த நாள் இமாம் அஹ்மதிடம் மாணவர் வந்து ‘நான் முதலாம் ஜுஸ்உவை மட்டுமே
பூரணப்படுத்தினேன்’ என்று கூறினார். அப்போது இமாம் அஹ்மத் ‘நீங்கள் இன்று
அல்லாஹ்வின் முன்னால் குர்ஆனை ஓதுவதுபோல் ஓதுங்கள்’ என்று கூறினார்.
அதிர்ச்சியடைந்த மாணவர் திரும்பிச் சென்றார்.

அடுத்த நாள் கண்ணீர் வடித்தவராக மாணவர் திரும்பி வந்தார். அவருடைய
முகத்திலே களைப்பின் ரேகைகள் படிந்திருந்தன. அப்போது இமாம் அஹ்மத் ‘எனது
மகனே நீங்கள் எவ்வாறு செயற்பட்டீர்கள்’ என்று கேட்டார்.

அதற்கு மாணவர் அழுதவாறு பதிலளித்தார். ‘இமாமே அல்லாஹ் மீது ஆணையாக இரவு
முழுவதும் ஸூறதுல் பாத்திஹாவைக் கூட என்னால் முழுமையாக ஓதி முடிக்க
முடியவில்லை’ என்று கூறினார்.

நன்றி -mugavari-mugavari

++++++++++++++++++++++++++++++++++++++ தமிழ் இஸ்லாம் குழுமம்++++++++++++++++++++++++++++++++++++++
tamil islam forum
avatar
Admin
Admin

Posts : 43
Points : 156
Reputation : 1
Join date : 23/01/2011

View user profile http://islam.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum