முஹம்மது(ஸல்) அவர்கள் புத்தமத வேதங்களில் முன்னறிவிப்புகள்

Go down

முஹம்மது(ஸல்) அவர்கள் புத்தமத வேதங்களில் முன்னறிவிப்புகள்

Post by Admin on 27/01/11, 12:47 pm

1.பர்மிய மூலங்களிலிருந்து

புத்தர் சரிபுத்தாவிற்கு கூறியதாவது
ஷ......... நம்முடைய சுழற்சி மகிழ்ச்சிகுரிய ஒன்றாகும். ககுஸநதா, கோனோகாம்னா, கஸபா என்ற மூ}ன்று தலைவர்கள் ஏற்கனவே வாழ்ந்துள்ளனர்.நானே உயர்ந்த புத்தராவேன். ஆனால் எனக்குப் பிறகு, இந்த மகிழ்ச்சியான சுழற்சி நீடித்துக் கொண்டிருக்கும் போதே அதனுடைய இறுதி ஆண்டுகள் முடிவதற்கு முன்பாகவே மெத்தெய்யா என்னும் புத்தர் தோன்றுவார்.அவர் மிகவும் உன்னதமானவரும் எல்லா மனிதர்களின் தலைவருமாவார். [1]

2 (சிலோன் (-ஸ்ரீலங்கா) மூலங்களிலிருந்து)
நீங்கள் போன பிறகு எங்களுக்கு யார் போதிப்பார்கள்? என்று ஆனந்தா அருள் புரியப்பட்டவரிடம் கேட்டான். அருள் புரியப்பட்டவர் பதிலளித்து:-
நான் இப்புவியில் தோன்றிய முதல் புத்தருமல்ல மேலும் நானே இறுதியானவரும் இல்லை. சரியான காலத்தில் வேறொரு புத்தர் இந்த உலகத்தில் தோன்றுவார். அவர் புனிதமானவர், மிகவும் அறிவொளி மிக்கவர், ஞானம் பொருந்திய நடத்தை அளிக்கப்பட்டவர், மக்களின் நம்பிக்கை நட்சத்திரம், பிரபஞ்சத்தை அறிந்த அவர் மனிதர்களின் ஒப்பற்ற தலைவர்; வானவர்களுடையவும் மற்றும் மனிதர்களின் தலைவர். நான் உங்களுக்கு போதித்த அதே மாறாத உண்மைகளை அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார். அவர் தன்னுடைய மார்க்கத்தை பிரச்சாரம் செய்வார். அதன் ஆரம்பம் புகழ் மிக்கதாகவும் அவர் உச்சம் புகழ் மிக்கதாகவும் அதன் இலட்சியம் புகழ் மிக்கதாகவும் இருக்கும். நான் தற்போது பிரகடனப்படுத்துவது போன்று அவர் வாழ்க்கை நெறியை பிரகடனப்படுத்துவார். அது முற்றிலும் முழுமையானதும் பரிசுத்தமானதுமாகவும் இருக்கும். என்னுடைய சீடர்கள் நூற்றுக் கணக்கில் மாத்திரம் இருக்கையில் அவரின் சீடர்களோ ஆயிரக்கணக்கில் இருப்பர்.[2]
எவ்வாறு அவரை நாங்கள் அறிவோம்? என ஆனந்தா கேட்டான். அவர் ஷமைத்ரேயா என அறியப்படுவார் என அருள்புரியப்பட்டவர் பதிலளித்தார். அல்லது புத்தர் கூறினார்;
சந்தியாசிகளே, மனிதர்கள் எண்பதினாயிரம் ஆண்டுகள் வாழும் நாட்களில், உலகில் மெத்தெய்யா (அருட் கொடை) என்னும் பெயர் கொண்ட புத்தர் தோன்றுவார். அவர் புனிதமானவராவார் (அரஹாத்) அவர் மிக உன்னத ஞானத்தை பெற்றவர், உயர்ந்த நடை முறை ஞானம் அளிக்கப்பட்டவர், மங்களகரமானவர், பிரபஞ்சத்தை பற்றிய ஞானமுள்ளவர், நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மனிதர்களின் நடத்துனர், மனிதர்கள் மற்றும் வானவர்களின் தலைவர். அவரொரு அருள் செய்யப்பட்ட புத்தர். உன்னத ஞானத்தை அடைந்த பின்பு, வானவர்கள், பிசாசுகள், மிகப் பெரும் வானவர்கள், தத்துவ ஞானிகளின் இனம் மற்றும் பிராஹ்மணர்கள், இளவரசர்கள் பொது மக்கள் ஆகியோர் அடங்கிய இவ்வுலகிற்கு அதை வெளியிடுவார். நான் இந்த ஞானங்களையெல்லாம் பெற்று அதையே (மேற் கூறப்பட்ட) அதே மக்களுக்கு வெளியிடுவதைப் போன்றே (அவரும் அதை வெளியிடுவார்). இத்தகைய தன்மைகளோடுள்ள புத்தவாகிய நான் இவ்வுலகில் தோன்றியிருப்பதைப் போல (அவரும் தோன்றுவார்). நான் தற்போது பிரகடனப்படுத்துவது போன்று வாழ்க்கை நெறியை அவர் பிரகடனப்படுத்துவார். அது முற்றிலும் முழுமையானதும் பரிசுத்தமானதுமாகவும் இருக்கும். நான் தற்போது பல்லாயிரக்கணக்கான சந்தியாச சமுதாயத்தை உருவாக்கியிருப்பதைப் போன்று அவர் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் சமுதாயத்தை உருவாக்குவார்.[3]
அல்லது
ஷஅந்தக் காலத்தில், சகோதரர்களே, மெத்தெய்யா என்னும் பெயர் கொண்ட உன்னதமான ஒருவர் இவ்வுலகில் தோன்றுவார். அவர் புனிதமானவர், முழு அறிவொளி பெற்றவர், ஞானத்திலும் நன்மையிலும் மகிழ்ச்சியிலும் நிரம்பியவர், உலகங்களின் அறிவுகளைக் கொண்ட அவர், தலமையை விரும்பும் மனிதர்களுக்கோர் இணையற்ற தலைவர், தெய்வங்கள் மற்றும் மனிதர்களின் போதகர் தற்போது நானிருப்பது போன்ற உயர்வு மிக்க புத்தர். முகத்திற்கு முகம் நேராக பார்ப்பதைப் போன்று அவர் இந்தப் பிரபஞ்சத்தை அதனுடைய ஆவிகள், அதனுடைய பிராஹ்மணர்கள், அதனுடைய மாராக்கள், அதனுடைய உலகின் துறவிகள் மற்றும் பிராஹ்மணர்கள், இளவரசர்கள் மற்றும் மக்களை, நான் தற்போது தெளிவாக கண்டு உணர்வது போன்று, தெளிவாக கண்டு உணர்வார். அவர் பிரகடனப்படுத்தும் மார்க்கம் உள்ளேயும் புறமும் சத்தியமானதாகும். அது அதன் ஆரம்பத்திலும், அதன் முன்னேற்றத்திலும், அதன் உச்சியிலும் இனிமையானதாக இருக்கும். மிக்க உயர்ந்த வாழ்க்கை(நெறி)யை அதன் எல்லா முழுமையோடும் அதன் அனைத்து பரிசுத்தத்தோடும், நான் தற்போது அறியச் செய்வது போன்று, அறியச் செய்வார். சில நூற்றுக்கணக்கான சகோதரர்கள் உள்ள கூட்டமைப்பு என்னை பின் தொடரும் அதே வேளையில் அவரையோ ஆயிரக்கணக்கான சகோதரர்கள் உள்ள கூட்டமைப்பு பின் தொடரும்.[4]


3 (சைன, சமஸ்கிருத மூலங்களிலிருந்து)
ராஜகிரிஹாவிலுள்ள கிரித்ரகுதா [5] மலை மேல் தாத்தகதா வாழ்ந்த அந்த முன் நாட்களில் பிக்சுக்களிடம் அவர் இவ்வாறு உரையாற்றினார்; வரும் வருடங்களில் இந்த ஜம்புத்யிபா நாடு சமாதானமாகவும் ஓய்வாகவும் இருக்கும் போது, மனிதர்களின் வயது 80000 வருடங்களாயிருக்கும் போது மைத்ரேயா என்ற பிரஹ்மன் தோன்றுவார். அவரின் உடல் சுத்த தங்கத்தினாலாதும், பிரகாசமானதும், ஒளி சிந்துவதாகவும் பரிசுத்தமானதாகவும் இருக்கும். தன் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு அவர் முழுமையான புத்தராக ஆவார். எல்லா படைப்புக்களின் நலன்களுக்காகவும் அவர் முப்பரிமாண சட்டத்தை[6]போதிப்பார். நான் விட்டுச் செல்லும் சட்டத்தின் சிறப்புக்கள் எவரிடம் உள்ளனவோ அவரே இரட்சிக்கப்படுவார். விலை மதிப்பற்ற மூன்று வணக்கப் பொருட்களுக்காக இவைகளை (-இந்த உபதேசங்களை) தங்கள் மனதில் மரியாதையுடன் எண்ணுவார்களேயானால், அவர்கள் பண்பட்ட சீடர்களாகயிருந்தாலும் அல்லது கொள்கைகளுக்கு அடிபணிபவர்களோ அல்லது அடிபணியாதவர்களாக இருப்பினும், அவரின் (-அந்த இறுதி புத்தரின்) பிரச்சார சக்தியால் (போதியின்) கனியை பெறவும் இறுதி மீட்சியை பெறவும் செய்வார்கள். நான் விட்டுச் செல்லும் சட்டத்தால் கவரப்பட்டவர்களின் மாற்றத்திற்காக முப்பரிமாண சட்டத்தை அவர் பிரகடனப்படுத்தும் அதே வேளையில் மற்றவர்களும் மாற்றப்படுவார்கள்.[7]

4 (திபெத்திய மூலங்களிலிருந்து)
பான்ஜ்சென்-ரின்-போச்சி(மிகப்பெரும் ஞானஆபரணம்) பெலிங்ஸ்(மேற்கத்தியர்கள்)என்பவர்களின் புமியில் ஆத்மீக வெற்றியாளராக(கோம்-இதன்-தா) தோன்றி, பல காலமாகவிருந்த அறியாமைகள் தவறுகள் ஆகியவற்றை அழிப்பதற்கு மனமிரங்கும் அவ் வேளை வரை, பெலிங்-பா(ஐரோப்பா) வின் தவறான கருத்தோட்டங்களை களைய முயல்வது பெரும்பாலும் பயன் தராது. அவளின்(ஐரோப்பாவின்) மக்கள் எவர் சொல்லையும் கேட்க மாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.ஜ8ஸ
தனக்குப் பிறகு மைத்ரேயா என்பவரின் தோற்றத்தை பற்றி கவுதம புத்தர் முன்னறிவித்துள்ளார் என்பது மேற்கண்ட புத்தமத வெளிப்பாடுகளிலிருந்து தெரிய வருகின்றது.

[1] Buddhism in Translation by Warren PP, 481-2
[2] Gospel of Buddha by Carus PP. 217-8
[3] Buddhist and Christian Gospels by Edmunds Vol. II. PP. 160-1
[4] Cakkavati-Sihanada Suttanta. The Mahabodhi Society Translation
[5] Others think at “Benares”
[6] Kk;Kiw jpUg;gpr; brhy;yg;gLk;
[7] Si-Yu-Ki. Vol 2. PP. 46-7
[8] The Secret Doctrine by Nlavatsky. Vol. III. P. 412.

http://www.tamilislam.com/
avatar
Admin
Admin

Posts : 43
Points : 156
Reputation : 1
Join date : 23/01/2011

View user profile http://islam.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum