அல்லாஹ் பேச மறுக்கும் மூன்று நபர்கள் .

Go down

அல்லாஹ் பேச மறுக்கும் மூன்று நபர்கள் .

Post by sheik on 27/01/11, 10:41 am

அபூதர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:


' மூன்று நபர்களிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான்.அவர்களை தூய்மைப்படுத்தவும்மாட்டான். அவர்களுக்கு கடும் வேதனை உண்டு '' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை இதைக் கூறினார்கள்.அப்போது நான், '(அந்தமூவரும்) நட்டமடைந்து விட்டார்கள். கவலை அடைந்து விட்டார்கள். இறைத்தூதர் அவர்களே! அவர்கள் யார்?'' என்றுகேட்டேன். 1)வேட்டியை (அணிந்திருக்கும் போது) தரையில் பட பூமியல் தொங்க விட்டுச் செல்பவன் 2) தான்செய்த உதவியை சொல்லிக் காட்டுபவன்3) பொய் சத்தியம் செய்து தன் சொத்தை விற்பனை செய்தவன் என்றுநபி(ஸல்) கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 794)அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

'தன் வேட்டியைத் தொங்க விட்டவராக ஒருவர் தொழுது கொண்டிருந்த போது, அவரிடம்நபி(ஸல்) அவர்கள் ''நீர் சென்று, உளுச்செய்வீராக' என்று கூறினார்கள். அவர் சென்று உளுச் செய்தார். பின்பு வந்தார். '' நீர் சென்று, உளுச்செய்வீராக'' என்று நபி(ஸல்) கூறினார்கள். அவர்களிடம் ஒருவர் ''இறைத்தூதர் அவர்களே!அவரிடம் உளுச் செய்ய ஏவுகிறீர்கள். பின்பு அவர் விஷயமாக மவுனமாக இருக்கிறீர்கள் என்ன காரணம்?'' என்றுகேட்டடார். ''அவர் தன் வேட்டியைதொங்க விட்டவராக தொழுது கொண்டிருந்தார். நிச்சயமாக அல்லாஹ் (ஆடையை) தொங்க விட்டுத் திரிபவரின் தொழுகையை ஏற்கமாட்டான்'' என்றுநபி(ஸல்) கூறினார்கள்.(அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 797)அலீ(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நபி(ஸல்) அவர்கள் பட்டை எடுத்து அவர்கள் அதனை தமது வலது கையில் வைத்தார்கள். தங்கத்தை எடுத்து தமது இடதுகையில் வைத்தார்கள்.பின்பு, ''நிச்சயமாக இந்த இரண்டும் என் சமுதாயத்தின் ஆண்களுக்குத் தடை செய்யப்பட்டதாகும் '' என்று கூறியதைநான் பார்த்தேன். (அபூதாவூது) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 807)

sheik

Posts : 4
Points : 19
Reputation : 4
Join date : 24/01/2011

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum