குர்ஆனை எல்லாராலும் விளங்க முடியுமா?

Go down

குர்ஆனை எல்லாராலும் விளங்க முடியுமா?

Post by INAS on 24/01/11, 09:46 pm

குர்ஆனை பற்றி சில தகவல்கள


மனிதர்களிடம் ஒரு பொதுவான வழக்கமுள்ளளது அவர்கள் இயற்கையான
உலகவிடயங்களை சொல்லும் போது அது இயற்கையாக நடந்தது போல் சொல்வார்கள். உதாரணம் : 1. மழை பொழிந்தது
2. மரம் முளைத்தது அதே நேரம்
மறுமை சம்பந்தமான விடயங்களை சொல்லும் போது அது அல்லாஹ்வே செய்வது போல் சொல்வார்கள்

உதாரணம் 1. அல்லாஹ் உலகை அழிப்பான்
2. அல்லாஹ் வானத்தை பிளப்பான்


மனிதன் இயல்பாக சிந்திப்பது இப்படித்தான்.
ஆனால் குர்ஆனை பொறுத்தவரையில் இதற்கு மாற்றமாகதான் சொல்கிறது
உலக விடயங்களை சொல்லும் போது
அல்லாஹ் தாமே செய்வதாக கூறுகிறான்


உ-ம். 1. உங்களை நாம் சோடிகளாக ஆக்கினோம் (சுரா நபஹ் )
2. உங்களுக்கு மேலால் பலமான 7 வானங்களை நிர்மாணித்தோம் (சுரா நபஹ் )

இப்படியாக அல்லாஹ் தானே செய்வதாக சொல்கிறான்.
குர்ஆனின் உலகம் சம்பந்தமான எந்த வசனமாக இருந்தாலும் இந்த அமைப்பில் தான் வரும். மறுமையை பற்றி சொல்லும் போது அது இயல்பாக அதாவது தாமாகவே நடப்பது போன்ற மொழிப் பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.


உ-ம் 1. வானம் திறந்து விடப்பட்டு அது வாயில்களாக மாறும் (சுரா நபஹ் 19)
2. மலைகள் பெயர்க்கப்பட்டு அது கானல் நீராக மாறும் ((சுரா நபஹ் 20) மறுமை சம்பந்தமான எல்லா வசனங்களும் இந்த அமைப்பிலே இருக்கும்.
குர்ஆன் உண்மையிலே ஒரு பெரிய சவாலை நோக்கும் ஒரு நூல்
அதாவது ஒரு சிரிய நூலை வைத்துக் கொண்டு நபியவர்களின் காலத்திலிருந்து மறுமை வரை வரும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல வேண்டும்.

எல்லா வித்தியாசமான காலம் நாகரீகங்களுக்கும் பிரதேசங்களுக்கும் பொருத்தமாகவுமிருக்க வேண்டும். அதனால் குர்ஆன் பல முறைகளில் தன் விளக்கத்தை உள்ளடக்கி வைத்திருக்கிறது.


1. ஒவ்வொரு சுராவுக்கும் மையக்கருத்து இருக்கும் அதன் மூலம் ஒரு அர்த்தத்தை செல்லும்.

2. சுரா சில கிளைதலை;ப்புக்கள் இருக்கும் அதன் மூலம் சில விடயங்களை உணர்த்தும்

3. நுணுக்கமான சொற்றொடர்கள் மூலம் சில விடயங்களை உணர்த்தும்.

4. மற்றும் ஒவ்வொரு சுராவுக்கும் மறைமுகமாக உணர்த்தும் ஒரு கருத்து இருக்கும்.

5. சில சுராக்கள் அமைவிடத்தை மட்டும் வைத்து சில விடயங்களை உணர்த்தும்.

இவ்வாறாக பல முறைகளில் குர்ஆனின் அர்த்தத்தை விளங்களலாம்.
குர்ஆனின் சுராக்கள் அமைத்திருக்கும் ஒழுங்கு (ஓடர்) அதற்கும் பல நியாயங்கள் அர்த்தங்கள் இருக்கின்றன.

குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை வாசிப்பதன் மூலம் நமக்கு குர்ஆனை ஆழமாக விளங்குவது சாத்தியமற்றது அப்படி விளங்குவது பெரியளவில் நம் சிந்தனையில் தாக்கம் செலுத்தும் என்று எம்மால் எதிர்பார்க்க முடியாது. நாம் குர்ஆனை ஆழமாக விளங்க முயற்சிப்போம்.
A.R.M. INAS
inasinas@live.com
inaasinaas.blogspot.com

INAS

Posts : 17
Points : 53
Reputation : 6
Join date : 24/01/2011
Age : 33

View user profile http://inaasinaas.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum